கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள்ஆணைக்குழுவின் சார்பில் விழிப்புணர்வு பேரணி

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
kk

 

கிருஷ்ணகிரி மாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குழுவின் சார்பில், இன்று தேசியசட்டப் பணிகள் ஆணைக்குழு வாரவிழா இன்று முதல் வருகின்ற 18 ஆம் தேதி வரை விழா கொண்டாடப்படுகிறது கிருஷ்ணகிரி நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற வாரவிழா துவக்க நாளில் சட்ட விழிப்புணர்வு முகாமினைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சட்டம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்கள் அறியும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி பூர்ணிமா கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்.

பேரணி

 

இந்த விழாவின் போது மாவட்ட நீதிபதியும் மக்கள் நீதி மன்றத்தின் தலைவருமான அறிவொளி , சார்பு நீதிபதியும், மாவட்ட சட்டப்பணிகள் ஆணையத்தின் செயலாளருமான தஸ்னீம், காவல் துணை கண்காணிப்பாளர் ரவிக்குமார், காவல் ஆய்வாளர் அன்புமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.நகரின் முக்கிய பகுதி வழியாக சென்ற இந்தப் பேரணியின் போது பெண்குழந்தையை காக்க வேண்டும். பெண் சிசு கொலையை தடுக்க வேண்டும், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க வேண்டும், சட்டம் குறித்த விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தியபடி சென்றார்கள். மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியின் போது சட்டம் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்த விழிப்புணர்வு பேரணியின் போது வழக்கறிஞர்கள், சட்டம் சார்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்கள், கல்லூரி மாணவிகள், பழங்குடி இனமக்கள், மாற்றுத்திறனாளிகள், நீதித்துறை அலுவலர்கள் என ஏராளமானவர்கள் கலந்துக் கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து