முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி மாவட்டத்தில் 11 இடங்களில் தடுப்பணைகள் - முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தேனி மாவட்டத்தில் வைகை அணை, நாகலார் ஒடை, கொட்டக்குடி ஆறு உள்ளிட்ட 11 இடங்களில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று நடைபெற்றது. தேனியில் நடைபெற்ற இந்த விழாவில் கலந்து கொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேனி மாவட்டத்திற்கான சிறப்பு அறிவிப்புகளை அறிவித்தார். அதன் விபரம் வருமாறு:-

தடுப்பணைகள்

போடிநாயக்கனூர் வட்டம், பூதிபுரம் கிராமம், வலையாற்றின் குறுக்கே மாமரத்துவயல் அருகிலும், நாட்டாமைதோப்பு அருகிலும் இரண்டு தடுப்பணைகள் அமைக்கப்படும். உத்தமபாளையம் வட்டம், தேவாரம் கிராமத்தில் பிள்ளையார் ஊத்து ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை அமைக்கப்படும் ஆண்டிபட்டி வட்டம், கடமலைகுண்டு கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி வட்டம், வள்ளல்நதி கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிபட்டி வட்டம், எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் நாகலார் ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
போடிநாயக்கனூர் வட்டம், மதுரை வீரன் கோவில் அருகே அணைக்கரைபட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமத்தில் புல எண்.683/2 அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், போடி கிராமத்தில் புல எண்.1218 அருகே சின்னாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடிநாயக்கனூர் வட்டம், மாணிக்கபுரம் அருகே சுத்த கங்கை ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே மஞ்சளாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.

சிமெண்ட் வாய்க்கால்...

பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புது அணைக்கட்டு கால்வாய் தூர் வாரப்பட்டு, மதகுகளைப் புதியதாகக் கட்டி, மஞ்சளாற்றில் வரும் தண்ணீர் எவ்வித தடையுமின்றி மத்துவார்குளம் கண்மாயை சென்று அடையும் வகையில் சிமெண்ட் வாய்க்காலாக மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் 474 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி உறுதி செய்யப்படும். தேனி வட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அல்லிநகரம் மீறுசமுத்திரம் கண்மாயை ஆழப்படுத்தி அதன் கொள்ளளவு உயர்த்தப்படும்.

சிறுபாலங்கள்

தேசிய நெடுஞ்சாலை 49-ல் கி.மீ.50/6-58/0 அதாவது ஆண்டிபட்டி கணவாய் முதல் தி.சுப்புலாபுரம் வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். தேசிய நெடுஞ்சாலை 49-ல் கி.மீ.74/0 - 76/450 மற்றும் 77/6 - 80/0 அதாவது தேனி நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியிலிருந்து போடி விலக்கு வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். ஆண்டிபட்டி - மயிலாடும் பாறை - தங்கம்மாள்புரம் சாலை வழி வாய்கால்பாறை மூலக்கடை சாலையில் கிமீ. 7 / 2 மற்றும் கிமீ. 1 / 10 ஆகிய இடங்களில் இரண்டு உயர்மட்டப் பாலங்கள் கட்டப்படும். போடி - தேவாரம் - லட்சுமி நாயக்கன்பட்டி வழியாகச் செல்லும் திம்மிநாயக்கன்பட்டி சாலையில் கி.மீ. 4 / 6 (i) மற்றும் 4 / 6 (ii) ஆகிய இடங்களில் இரண்டு சிறுபாலங்கள் கட்டப்படும்.

கையடக்கக் கணினிகள்

தேனி மாவட்டம், பெரிய குளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நிதி உதவியுடன் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டயாலிசிஸ், எண்டோஸ்கோப், மன நல சிறப்பு பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம்  அமைக்கப்படும். மூப்பியல் பிரிவு ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 162 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களைப் பதிவு செய்திட கையடக்கக் கணினிகள் வழங்கப்படும்.

கம்பம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் உள்ளிட்ட நவீன ஆய்வகக் கருவிகள் வழங்கப்படும். வீரபாண்டி அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். வீரபாண்டி கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி மேம்படுத்தப்படும். மயிலாடும்பாறை மற்றும் கடமலைக்குன்று வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து