20 ஓவர் கிர்க்கெட் போட்டியில் ரன்கள் கொடுக்காமல் 10 விக்கெட்டுகள் வீழ்த்தி ராஜஸ்தான் வீரர் சாதனை

வியாழக்கிழமை, 9 நவம்பர் 2017      விளையாட்டு
rajasthan player record 2017 11 10

ஜெய்ப்பூர் : 20 ஓவர் கிர்க்கெட் போட்டியில் ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் கிரிக்கெட் வீரர் சாதனை புரிந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்தில் மறைந்த பவேர்  சிங் என்பவர் பெயரில்  20 ஓவர் போட்டி நடத்தபட்டது. இந்த போட்டியில் உள்ளூரை சேர்ந்த் திஷா கிரிக்கெட் அகாடமியும்,  பேர்ல் அகாடமி  அணிகளும் மோதின. டாஸ் வென்ற  பேர்ல் அணி  பந்து வீச்சை தேர்வு செய்தது.  திஷா அணி குறிப்பிட்ட 20 ஓவரில் 156 ரன்களை எடுத்தது.

அடுத்து 157 ரன்கள் இலக்குடன் பேர்ல் அணி பேட்டிங்கை தொடங்கியது.  அதனால் 36 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதற்கு காரணம்  திஷா அணி சார்பில் பந்து வீசிய  ஆகா‌ஷ் சவுத்ரிதான் காரணம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஆகாஷ் ரன்கள் எதுவும் கொடுக்காமல் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை புரிந்து உள்ளார்.


ஆகாஷ் முதல் ஓவரில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.  அடுத்த அவரின் 2-வது 3-வது ஓவரில்  4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது கடைசி ஓவர் அவர் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆகாஷ் ராஜஸ்தான் உத்தபிரதாச எல்லையில் உள்ள பரத்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து