சக்தி வாய்ந்த நபராக உருவாகிறார் சவுதி இளவரசர் முகமது பின் சல்மான்..?

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      உலகம்
saudi 2017 11 10

ரியாத்,: சவுதியின் சக்தி வாய்ந்த நபராக உருவாகியுள்ள இளவரசர் முகமது பின் சல்மான் மீது இன்று உலக ஊடகங்கள் அனைத்தின் பார்வையும் விழுந்துள்ளன.

சவுதி மன்னர் சல்மானின் உதவியுடன், அவரது மகன் இளவரசர் முகமது பின் சல்மான் சவுதியில் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் முகமது பின் சல்மான் மீது உலக ஊடகங்களின் பார்வை விழ முக்கியக் காரணமாக மாறியுள்ளது.

சமீபத்தில் ஊழலுக்கு எதிராக முகமது பின் சல்மானின் உத்தரவில், சவுதி அரேபியாவின் 11 மூத்த இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பெருந்தொழில் அதிபர்கள் உட்பட 38 பேர் கைது செய்யப்பட்டனர்.


தொடர்ந்து சவுதி அரேபியாவின் சீர்திருத்த நடவடிக்கையில் இறங்கியுள்ள முகமது பின் சல்மான் பெண்களுக்கான சீர்திருத்த நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டி வருவது சவுதியில் அவருக்கான ஆதரவை அதிகரித்து வருகிறது.

சவுதியின் சக்தி வாய்ந்த நபராக முகமது பின் சல்மான் உருவாகிவருவதற்கு கூறப்படும் காரணங்கள் வருமாறு:-
1.  சவுதி மன்னர் சல்மானுக்கு பிறகு சவுதியின் மன்னராக பதவியில் அமரும் வாய்ப்பு 90சதவீதம் முகமது பின் சல்மானுக்கு உள்ளது. இதன்மூலம் 31 வயதான முகமது பின் சல்மான் சவுதியின் மன்னராக நீண்ட நாள் பதவி வகிக்க அதிக வாய்ப்புள்ளது.

2.  ஊழல் விவகாரத்தில் மூத்த சவுதி இளவரசர்கள் மீதான இவரது நடவடிக்கை சவுதி மக்களுக்கிடையே இவர் மீதான நம்பிக்கை அதிகரிக்க காரணமாகியுள்ளது.

3. சவுதி பெண்கள் கார் ஓட்டுவதற்கு அனுமதி அளித்து அமைச்சரவை குழுவுக்கு அறிக்கை அனுப்பியதில் முகமது சல்மானின் பங்கும் குறிப்பிடத்தக்கது. மேலும் முகமது பின் சல்மான் பெண்களுக்காக தொடர்ந்து சமூக சீர்திருத்த முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

4. சவுதியின் பொருளாதாரம் என்பது அதன் எண்ணெய் வளத்தை மட்டுமே பெருமளவு சார்ந்துள்ளது. ஆனால் இளவரசர் முகம்து பின் சல்மான் சல்மான் சவுதியின் பொருளாதாரம் 2030-ம் ஆண்டுக்குள் எண்ணெய் மட்டுமில்லாது பிற துறைகள் சார்ந்தும் இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டுள்ளார்.

5. சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சராக உள்ள இளவரசர் முகமது பின் சல்மான், ஈரான், கத்தார் ஆகிய நாடுகளுக்கு நேரடி எதிரியாக உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து