உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு போலீஸாருக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      சென்னை

உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் போலீஸாருக்கான மருத்துவப் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 2-வது தளத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்

மருத்துவப் பரிசோதனை முகாம்

அப்போது, அவர் கூறும்போது, “போலீஸார் பணியை மட்டும் அல்ல உடலையும் சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டும். கட்டுக்கோப்பாக உடலை பேணிப் பாதுகாக்க வேண்டும்” என்று போலீஸாருக்கு அறிவுரை வழங்கினார்.சென்னை அரசு பொது மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் நாராயணசாமி தலைமையிலான மருத்துவக் குழுவினர் போலீஸாருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தினர். ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்டவை தொடர்பாக போலீஸாருக்கு சோதனை நடத்தப்பட்டு மருத்துவ முடிவும் உடனடியாக வழங்கப்பட்டது.உடலில் நோய் அறிகுறிகள் இருப்பின் அதை மருத்துவர்கள் சுட்டிக்காட்டி, உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள அறிவுரை வழங்கினர். இதில், காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் போலீஸார், அமைச்சுப் பணியாளர்கள் என சுமார் 300 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கூடுதல் காவல் ஆணையர்கள் எச்.எம்.ஜெயராம், எம்.சி.சாரங்கன், எஸ்.என்.சேஷசாயி, கே.பெரியய்யா, எம்.டி.கணேசமூர்த்தி உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து