அறிய வகை பறவைகளை வேட்டையாடியவர்கள் கைது 2 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      காஞ்சிபுரம்

 காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள மலையாங்குளம் வனப்பகுதி அருகே உள்ள குட்டை பகுதியில் தற்போது பெய்த வரும் பருவ மழையில் குட்டை முழுவதும் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த குட்டையில் இறைத் தேடி பல்வேறு அறிய வகை பறவைகள் வந்த வண்ணம் உள்ளன.

15 ஆயிரம் அபராதம்

இங்கு வரும் அறிய வகை பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். தகவலின் பேரில் வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற பார்த்த போது அங்கு மூர்த்தி 30, அப்பாதுரை 36, எல்லப்பன் 26 ஆகிய மூன்று பேர் அங்குள்ள அரியவகை பறவைகளை வேட்டையாடியது தெரியவந்தது. இதையடுத்து பறவைகளை வேட்டையாடிய மூவரையும் வனத்துறையினர் மடக்கிப் பிடித்தனர். அவர்கள் மீது வன உயிரின பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் 15 ஆயிரம் அபராதம் தொகை வசூலிக்கப்பட்டது. மேலும் அவர்கள் வேட்டையாடப் பயன்படுத்திய இரண்டு நாட்டுத்  துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களையும் வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். மேலும் இது போன்று நடவடிக்கையில் மீண்டும் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அலுவலர்கள் எச்சரிக்கை செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து