லோக் அதாலத் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பொது மக்களுக்கு விநியோகம்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      காஞ்சிபுரம்

 காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெருமந்தூரில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் லோக் அதாலத், தேசிய மக்கள் நீதிமன்றம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதியன்று நடைபெற உள்ளது.

விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள்

இந்த தேசிய மக்கள் நீதி மன்றம் குறித்து பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும் பஸ் நிலையங்கள் உள்ள பஸ்களில் துண்டு பிரசுரம் ஒட்டியும், மக்கள் கூடும் இடங்களில் விழிப்புணர்வு துண்டுபிரசுரங்கள் வழங்கியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் வட்ட சட்டப் பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் இராமலிங்கம், மற்றும் நீதிமன்ற வழக்கறிஞர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து