செங்கோட்டையை அடுத்துள்ள இலஞ்சி டிடிடிஏடிஎஸ் டேணியல் இராஜம்மாள் கல்வியியல் கல்லூரியில் வைத்து தேசிய சட்ட விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
பலர் பங்கேற்பு
முகாமிற்கு வட்டசட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட குற்றவியல் உரிமையியல் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதியுமான பிடி.சதீஷ்குமார் தலைமைதாங்கினார். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஏபி.அருணாசலம், அரசு உதவி குற்றவியல் வழக்கறிஞர் பரணிந்தரன், மாரிக்குட்டி ஆகியோர் முன்னிலைவகித்தனர். கல்லூரி முதல்வர் கார்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியில் வழக்கறிஞர்கள் சக்திவேல், செல்வம், பொன்னுச்சாமி, சாமி, நல்லையா ஆகியோர் சட்ட நுணுக்கங்கள் விளக்கி பேசினர். முகாமில் கல்லூரி மாணவியர்கள், மற்றும் ஆசிரியைகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வழக்கறிஞர் எம்ஆர்கே.வேலு நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் செய்திருந்தார். முன்னதாக நீதிபதி சதீஷ்குமார் நீதிமன்ற வளாகத்தில் வைத்து குழந்தை தொழிலாளர்கள் ஒழிப்பு, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச்சட்டம் 2007, மற்றும் தமிழ்நாடு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு நலவிதிகள் குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினார்.