முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விழுப்புரம் மாவட்டப் பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் கலெக்டர் இல.சுப்பிரமணியன் ஆய்வு

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      விழுப்புரம்
Image Unavailable

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி, வல்லம், மேல்மலையனூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளை கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,   நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கொசு ஒழிப்புப் பணிகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை இணைந்து டெங்கு கொசு ஒழிப்பிற்கென மாவட்ட நிர்வாகம் சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  கலெக்டர் இல.சுப்பிரமணியன்,, அவர்களின் நேரடிப் பார்வையில், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகள் தினந்தோறும் நடைபெற்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றியம் தும்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், வல்லம் ஊராட்சி ஒன்றியம் மரூர் ஊராட்சி அம்மன்கோவில் தெரு, தோப்புத்தெரு, வன்னியர்தெரு, ரைஸ்மில்தெரு, மாதாகோவில்தெரு ஆகிய இடங்களிலும், மேல்மலையனூர் ஊராட்சி ஒன்றியம் மேல்மலையனூர் ஊராட்சிப் பகுதிகளிலும், வீடு வீடாக சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப்புழு உள்ளதா எனவும், கழிவுநீர் வாய்க்கால்கள், தேவைற்ற பொருட்களான பழைய டயர்கள், மண்பாண்டங்கள், பிளாஸ்டிக் பொருட்கள், தேங்காய் ஓடுகள், ஆட்டுஉரல்கள் ஆகியவற்றில் நீர் தேங்கி உள்ளதா எனவும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  மேல்மலையனூர் அருள்மிகு அங்காளம்மன் திருக்கோவில் சுற்றுப்பகுதிகளில் இருந்த தனியார் விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது, சுகாதாரமற்ற முறையில் இருந்த இரண்டு தனியார் விடுதிகளுக்கு தலா ரூ.25,000ஃ- அபராதம் விதிக்க வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.  மேலும், சுகாதாரத்துறை சார்பாக, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீரை கலெக்டர்  வழங்கினார்.மேலும், அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்தும், டெங்கு கொசு ஒழிப்பு குறித்தும், விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.  பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியை சுத்தமாக பராமரித்தாலே டெங்கு காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுக்க முடியும் என கலெக்டர் இல.சுப்பிரமணியன்,,  தெரிவித்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வி.மகேந்திரன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து