காஷ்மீர் முதல்வர், கவர்னரை சந்தித்து மத்திய அரசு பிரதிநிதி சர்மா ஆலோசனை

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      இந்தியா
dineshvar SHARMA 2017 11 06

ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான மத்திய அரசின் பிரதிநிதி தினேஷ்வர் சர்மா  அம்மாநில முதல்வர் மெஹ்பூபா முப்தி மற்றும் கவர்னர் என்.என்.வோரா ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.

காஷ்மீர் மாநிலத்திற்கான மத்திய அரசின் பிரதிநிதியாக உளவுத் துறை முன்னாள் தலைவர் தினேஷ்வர் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 5 நாள் பயணமாக கடந்த திங்கள்கிழமை ஜம்மு காஷ்மீர் சென்றார். இந்நிலையில் அவர் முதல்வர் மற்றும் கவர்னரைச் சந்தித்து பேசினார்.

அப்போது கவர்னர் வோரா கூறுகையில் ‘‘அனைத்துக் குழுக்களுடனும் சர்மா தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும். குறிப்பாக சமூகத்தின் மீது மாறாத நம்பிக்கை கொண்டவர்களுடன் உரையாட வேண்டும்'' என்றார்.


பின்னர் முதல்வர் மெஹ்பூபா முப்தியைச் சந்தித்தார் சர்மா. அப்போது மெஹ்பூபா கூறுகையில் ''காஷ்மீர் விவகாரத்தில் மாறுபட்ட பார்வைகள் இருப்பினும், நீடித்த, நிலையான பேச்சுவார்த்தையே மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும்'' என்றார்.

தினேஷ்வர் சர்மா பள்ளத்தாக்கில் 3 நாட்களும், ஜம்முவில் 2 நாட்களும் தங்கி, கட்சி தலைவர்கள், சமூக அமைப்பு நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து