முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் மீனவர்கள் 5 ஆவது நாளாக வேலைநிறுத்தம்:

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      ராமநாதபுரம்
Image Unavailable

  ராமேசுவரம்,- ராமேசுவரம் மீனவர்கள் தேசிய கடல் மீனவர் சேமிப்பு நிவாரணம் தொகை வழங்கும் வரை வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற மாட்டோம் என மீனவர்கள் திட்டவட்டமாக அறிவித்து நேற்றுடன் 5 ஆவது நாளாக தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராமேசுவரம் பகுதியில் 800க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடித்தொழிலில் ஆடுபட்டு வருகின்றனர்.இவர்கள் வாரத்தில் மூன்று நாட்கள் மட்டும் மீன்பிடித்தொழிலில் ஈடுபடுகின்றனர்.இந்த நிலையில் ஆண்டும் தோறும் மழை,புயல்,மீன்வறத்து இல்லாமல் என குறிப்பிட்ட நாட்கள் மீன்பிடிக்க செல்லாமலும் இருந்து வருகின்றனர்.இந்த நிலையில் மீன்வர்களின் நலன் கறுதி மத்திய,மாநில அரசுகள் தேசிய கடல் மீனவர் சேமிப்பு நிவாரணம் என் திட்டத்தில் மீனவர்களிடம் குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் சேமிப்பாக பெற்று ஆண்டு தோறும் ரூ.4500 என வழங்குகிறது.இந்த நிலையில் ராமேசுவரம் பகுதியில் மீன்பிடி விசைப்படகுகள் வைத்திருக்கும் சில மீனவர்களுக்கு இந்த தொகையை மீன்துறை நிர்வாகம் நிறுத்தியுள்ள.ஆதலால் இதனை கண்டித்தும்,உடனடியாக அனைவருக்கும் நிவாரணம் தொகையை வழங்ககோரியும் கடந்த திங்கள் கிழமை முதல் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து மீனவர்களின் ஈலோசணை கூட்டம் ராமேசுவரம் துறை முகப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை ராமேசுவரம் மீனவசங்க தலைவர் என்.ஜே.போஸ் தலைமையில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் நிவாரண தொகையை வழங்க வேண்டும் எனவும்,இலங்கை சிறையுள்ள் மீனவர்கள் தகுந்த மருத்துவ வசதிகள் இல்லமாலம் அவதிப்பட்டு வருவதால் அவர்களை உடனே விடுவிக்கவும், மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி வலைகள்,கயிறு,உதிரிபாகங்கள்,மீன்கள்,கருவாட்டு மீன்கள் ஆகிவற்றிற்கும் மத்திய அரசு ஜி,எஸ்,டி வரி அதிகமாக விதித்து இருப்பதால் விலை வாசிகள் உயர்ந்துள்ளதால் மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆதலால் அநைத்து கோரிக்கைகளையும் தமிழக அரசு கவனத்திற்கு எடுத்துக்கொண்டு மத்திய அரசுடன் பேச்சவார்த்தை நடத்தி கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்தனர்.மேலும் நிவராண தொகை வழங்கும் மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் தொடர்ந்து இருப்பதாகவும்  முடிவு செய்தனர்.இந்த கூட்டத்தில் ராமேசுவரம் மீனவர்கள் சங்க தலைவர்கள் சேசுராஜ,எமரிட்,தெட்சினாமூர்த்தி உள்பட மீனவர்கள் கலந்துகொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து