பிரதமர் மோடி நாளை பிலிப்பைன்ஸ் பயணம்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      இந்தியா
modi 2017 11 01

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை (12ம் தேதி)  பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு செல்கிறார்.

இதுகுறித்து வெளியுறவுத் துறை அமைச்சக செயலாளர் (கிழக்கு) பிரீத்தி சரண் கூறியபோது, “பிரதமர் மோடி வரும் 12-ம் தேதி பிலிப்பைன்ஸ் செல்கிறார். 14-ம் தேதி தலைநகர் மணிலாவில் நடைபெறும் இந்தியா - ஆசியான் மற்றும் கிழக்கு ஆசிய உச்சி மாநாடுகளில் பங்கேற்கிறார். இந்த மாநாட்டில் இருதரப்பு வர்த்தகம், முதலீடு மற்றும் முக்கியமான பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க உள்ளார். இந்த மாநாட்டுக்கு நடுவே, பிற நாட்டு தலைவர்களை மோடி தனியாக சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து