இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய கிரிக்கெட் அணி அறிவிப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      விளையாட்டு
ashwin-jadeja 2016 12 21

மும்பை: இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில், ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது.

டெஸ்ட் அணி
இலங்கை அணி மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ம் தேதி தொடங்குகிறது. இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இந்திய அணியில் இடம்பிடித்து வந்த ஹர்திக் பாண்டியாவிற்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. மற்றபடி இந்திய டெஸ்ட் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அவருக்குப் பதிலாக கூடுதல் பேட்ஸ்மேன் சேர்க்கப்படவில்லை.

வீரர்கள் விவரம்:
1. விராட் கோலி (கேப்டன்), 2. லோகேஷ் ராகுல், 3. முரளி விஜய், 4. தவான், 5. புஜாரா, 6. ரகானே, 7. ரோகித் சர்மா, 8. சகா (விக்கெட் கீப்பர்), 9. அஸ்வின், 10. ஜடேஜா, 11. குல்தீப் யாதவ், 12. மொகமது ஷமி, 13. உமேஷ் யாதவ், 14. புவனேஸ்வர் குமார், 15. இசாந்த் ஷர்மா.


சமீப காலமாக ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடரில் இடம் பிடிக்காமல் இருந்த அஸ்வின், ஜடேஜா ஆகியோர் டெஸ்ட் போட்டிக்கான அணியில் இடம்பிடித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து