இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு நாடாவின் ஊக்கமருந்து சோதனை அவசியமில்லை பி.சி.சி.ஐ மறுப்பு

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      விளையாட்டு
BCCI 2017 5 7

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய ஊக்கமருத்துக்கு எதிரான அமைப்பான நாடாவின் ஊக்கமருந்து சோதனை அவசியமில்லை என பிசிசிஐ மறுப்பு தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் இருக்கும் விளையாட்டு வீரர்கள் மீது ஊக்கமருந்து மற்றும் போதை மருந்து சோதனை நடத்தும் அமைப்புதான் நாடா. தேசிய ஊக்கமருத்துக்கு எதிரான அமைப்பான இது முதன்முறையாக இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீதும் சோதனை நடத்த முடிவு செய்து இருந்தது. இதற்காக அந்த அமைப்பு பிசிசிஐ, விளையாட்டு துறை என பல இடங்களில் அனுமதி கேட்டு இருந்தது.

ஆனால் நாடாவின் எந்த வேண்டுகோளுக்கும் பிடி கொடுக்காமல் பேசி வந்தது பிசிசிஐ. இந்த நிலையில் தற்போது பிசிசிஐ தனது நிலைப்பாட்டை இந்த விவகாரத்தில் தெளிவாக்கி இருக்கிறது. அதில் ''இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது ஊக்கமருந்து சோதனை நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏற்கனவே பிசிசியிடம் இருக்கும் ஊக்கமருந்து சோதனை குழுவே நல்ல கண்டிப்போடுதான் இருக்கிறது. ஆகவே நாடாவின் ஊக்கமருந்து  சோதனை அவசியமில்லை'' பிசிசிஐ ஊக்கமருத்துக்கு எதிரான அமைப்பான நாடா அதிகார எல்லைக்கு உட்பட முடியாது, இது சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இணைந்த தன்னார்வ அமைப்பு ஆகும்  என்று கூறியது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து