கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      தமிழகம்
rain 2017 10 12

சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக கடலோர மாவட்டங்களில் நாளை (12-ம் தேதி) முதல் கனமழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை அடுத்து வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மீண்டும் மழை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:

“நேற்று தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியானது மேற்கு திசை நோக்கி தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகப்பட்சமாக கன்னியாகுமரி தக்கலையில் 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்து வரும் இரு தினங்களை பொறுத்தவரையில் நவ.12 காலை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை இருக்கும். கனமழையைப் பொறுத்தவரை தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

3 நாட்களுக்கு மழை

சென்னையை பொறுத்தவரை இடைவெளி விட்டு சிலமுறை மழை இருக்கும். சில நேரம் சற்று கனமழை இருக்கும். தற்போது கடலோர மாவட்டங்களில் மூன்று நாட்களுக்கு மழை இருக்கும். மிதமான மழையாகத் தொடரும். அடுத்து தாழ்வுப் பகுதி நகர்வை ஒட்டி உள்மாவட்டங்களில் மழை தொடரும். வடகிழக்குப் பருவமழையானது தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த அக் 1 முதல் நேற்று நவ.10 வரை 24 செ.மீ. மழை பெய்துள்ளது. எதிர்பார்க்கப்பட்ட இயல்பான மழை அளவு 26 செ,மீ”. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து