6 இன்னிங்சில் 831 ரன்கள் எடுத்து ஆப்கான் வீரர் பகீர் ஷா சாதனை

வெள்ளிக்கிழமை, 10 நவம்பர் 2017      விளையாட்டு
Bhagir Shah s record 2017 11 10

புதுடெல்லி : ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் பகீர் ஷா 6 இன்னிங்சில் விளையாடி 831 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார்.

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்  பகீர் ஷா. 18 வயதாகும் பகீர் ஷா  6 இன்னிங்சில் விளையாடி 831 ரன்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். பகீர்  நான்கு முதல் தர ஆட்டங்களில்  விளையாடி கிரிக்கெட் உலகில் யாரும் எடுத்திராத இரட்டை சதம் மற்றும் முச்சதங்களையும் அடித்து உள்ளார்.

ஷா ஸ்பீன்கர் பிராந்தியத்தின் சார்பாக  அலோகோஜா அகமது ஷா அப்தாலி,4 நாட்கள் போட்டியில் கலந்து கொண்டார். ஷா முதல்  தர கிரிக்கெட்டில் மிககுறைந்த வயதில் ( 18 வருடம்  251 நாட்கள்) முச்சம் அடித்த  2 வது  வீரராவார். இந்த சாதனையை பொருத்தவரை பாகிஸ்தான் ஜாவித் மியாண்டட் தனது சிறுவயதில் ( 17 வருடம் 301 நாட்கள்)  முச்சதங்களை அடித்து உள்ளார். குறைந்த வயதில் இந்தியாவை சேர்ந்த  அமோல் மஜுமதருக்குஇரட்டைச் சதம் அடித்துள்ளார்.

ஷா 8 மணி நேரங்கள் விளையாடி ஆவுடாகாமல் 303 ரன்கள் எடுத்தார்.  6 இன்னிங்சில் 256*, 34, 11, 111, 116 மற்றும் 303*  அடித்து உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய தொடக்க வீரர் வில்லியம் போன்ஸ்போர்ட் தனது முதல் ஆறு இன்னிங்ஸ்களில் 741 ரன்கள்  எடுத்தார். இந்தியாவைச் சேர்ந்த ரிஷாப் பந்த் தனது முதல் 5 இன்னிங்சில் 562 ரனக்ள் எடுத்து உள்ளார். சச்சின் டெண்டுல்கர், விளையாட்டின் இரு வடிவங்களில் மிக அதிக ரன்கள் எடுத்தவர், முதல் வகுப்பு கிரிக்கெட்டின் முதல் பருவத்தில் 583 ரன்கள் அடித்திருந்தார்.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து