100 நோயாளிகளை தொடர் கொலைகள் செய்த செவிலியருக்கு ஆயுள் தண்டனை ஜெர்மனி போலீஸார் அதிர்ச்சி தகவல்

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      உலகம்
germany seviliear 2017 11 11

பெர்லின்: ஜெர்மனியைச் சேர்ந்த நீல்ஸ் ஹோகெல் என்ற முன்னாள் செவிலியர் 100 நோயாளிகளைக் கொன்றதாக அந்நாட்டு போலீஸார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

ஜெர்மனியைச் சேர்ந்தவர் நீல்ஸ் ஹோகெல் முன்னாள் செவிலியரான இவர், இரு நோயாளிகளை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு, அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக போலீஸார் நடத்திய விசாரணையில் நீல்ஸ் ஹோகெல், அவர் பணிபுரிந்த மருத்துவமனைகளில் 100 நோயாளிகள்வரை கொலை செய்ததாக வெளியாகியுள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஜெர்மனி போலீஸ் தரப்பில், ''நீல்ஸ் ஹோகல் 1999 - 2005 ஆகிய ஆண்டுகளில் இரு மருத்துவமனைகளில் பணியாற்றியிருக்கிறார். அதில் ஒல்டன்பெர்க் நகரின் மருத்துவமனையில் பணிபுரிந்தபோது 38 பேரையும், டெல்மன்ஹோஸ்ட் நகரில் பணிபுரியும்போது 62 பேரையும் கொலை செய்திருக்கிறார்.

தன்னுடன் உடன் பணிபுரிந்த சக பணியாளர்களை கவர நினைத்த நீல்ஸ் ஹோகெல், தனது பராமரிப்பிலிருந்த நோயாளிகளுக்கு செயற்கையான இதய செயலிழப்பு ஏற்படுத்தி காப்பற்ற முயற்சி செய்து இருக்கிறார். ஆனால் அவர்களில் பலர் இறந்திருக்கிறார்கள். மேலும் நோயாளிகளைக் கொல்வதற்கு நீல்ஸ் விஷ ஊசிகளைப் பயன்படுத்தி உள்ளார். இவ்வாறு 100 பேர்வரை அவர் கொன்று இருக்கிறார்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல் நிலை சீராக இருந்த நோயாளி ஒருவருக்கு திடீரென இதய பாதிப்பு ஏற்பட்டத்தை கண்ட நீல்ஸுன் உடன் பணிபுரிந்தவர்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் நீல்ஸின் பணி நேரங்களில்தான் பெரும்பாலான நோயாளிகளின் மரணங்கள் நடந்தது அவர்களது சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து நீல்ஸின் தொடர் கொலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து