ஜெயலலிதா அறிவித்த சேர்வாய் கண்டிகை திட்டம்: 5 மாதங்களில் முடிவடையும்: முதல்வர் அறிவிப்பு

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      தமிழகம்
edapadi cm 2017 09 30

சென்னை, சென்னையில் குடிநீர் தேவையை போக்குவதற்காக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சேர்வாய் கண்டிகை திட்டம், 5 மாதங்களில் முடிவடையும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிருபர்கள் கேள்விக்கு அளித்த பதில் வருமாறு:-
கேள்வி: சென்னையிலுள்ள குடிநீர் தேவையைப் போக்குவதற்காக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்ட சேர்வாய் கண்டிகை திட்டம் இன்னும் முடிக்கப்படாமல் இருக்கின்றதே?

பதில்: அதில் 1 டி.எம்.சி. தண்ணீர் தேக்கி வைக்கமுடியும். காலதாமதம் ஏற்படுவதற்கு காரணம், நாம் அணை கட்டுகின்ற பகுதிகளில் உள்ள நில உரிமையாளர்கள் நிலத்தை அரசிடம் ஒப்படைக்க மறுக்கின்றார்கள். அதற்கான பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானப்படுத்தி, அவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டு கொண்டிருக்கின்றது. அந்தப் பணி விரைவாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இன்னும் 4, 5 மாதங்களில் பணி நிறைவடைந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து