எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 55 இந்திய மீனவர்கள் பாக். கடற்படையால் சிறைபிடிப்பு

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      உலகம்
India-Fishermen 2017 6 18

இஸ்லாமாபாத் : எல்லைத் தாண்டி மீன் பிடித்த 55 இந்திய மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் 9 படகுகளும் சிறைபிடிக்கப்பட்டுள்ளன என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லை அமைந்துள்ளது. இந்த எல்லையை தாண்டி மீன்பிடிக்க இந்தியா மற்றும் பாகிஸ்தான் மீனவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

55 மீனவர்கள்

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் கட்ச் பகுதியில் சர்வதேச எல்லையில் வெள்ளிக்கிழமை இரவு இந்திய மீனவர்கள் பலர் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த பாகிஸ்தான் கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்துக் கொண்டிருந்த 55 மீனவர்களை சிறைபிடித்தனர். மேலும், அவர்களுடன் 9 மீன்பிடி படகுகளையும் கைப்பற்றி சிறை வைத்தனர். கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தான் கடற்படையினரால் 79 இந்திய மீனவர்கள் மற்றும் 13 மீன்பிடி படகுகள் சிறைபிடிக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து