ஆசஷ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணிக்கு ஆண்டர்சன் துணை கேப்டன்

சனிக்கிழமை, 11 நவம்பர் 2017      உலகம்
Spo - James Anderson 2017 11 11

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு துணை கேப்டனாக வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆசஷ் டெஸ்ட் தொடர் விளையாட இங்கிலாந்து அணி அந்நாட்டுக்கு சென்றுள்ளது. இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக வேகப்பந்து வீரர் ஆண்டர்சன் நியமிக்கப்பட்டுள்ளார். பென் ஸ்டோக்சுக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டு உள்ளார் பென்ஸ்டோக்ஸ் இரவு விடுதியில் சண்டையிட்டதில் சஸ்பெண்டு ஆனார். 35 வயதான ஆண்டர்சன் டெஸ்டில் அதிக விக்கெட் கைப்பற்றிய இங்கிலாந்து வீரர் ஆவார். அவர் 506 விக்கெட் சாய்த்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து