சமுத்திரகனி நான்கு வேடங்களில் நடிக்கும் ஏமாலி

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      சினிமா
samuthirakani

Source: provided

லதா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் லதா தாயாரித்துள்ள படம் ஏமாலி இதில் சமுத்திரகனி , அறிமுக நாயகனாக ஷாம்ஜோன்ஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.

நாயகியாகளாக அத்துல்யா, ரோஷினி ஆகியோர் நடிகத்துள்ளனர்.இவர்களுடன் பால சரவணன், சிங்கம்புலி, உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். படத்திற்கு ஒளிபதிவு- ரத்திஸ்கண்ணா, ஐ.ஜே.பிரகாஷ், எடிட்டிங்- ஆர். சுந்தரம்,வசனம் -ஜெய மோகன், கலை-ஆறுமுகசாமி, இசை ஷாம்.டி.ராஜ், மக்கள் தொடர்பு -நிகில்,கதை,திரைக்கதை -வி.இசட்.துரை.

படத்தை பற்றி இயக்குனர் வி.இசட்.துரை கூறும்போது;- இது ஒரு காதல் தொடர்பான படம் இதில் சமுத்திரகனி மற்றும் ஷாம்ஜோன்ஸ்கதாபாத்திரத்தில் நான்கு லேயர்களாக அமைக்கப்பட்டுள்ளது. சமுத்திரகனி போலீஸ் அதிகாரி,டெல்லிஇண்டலிஜெண்ட்,சாப்ட்வேர் இன்ஜினியர், கால் ஊனமுற்றவர் என நான்கு விதமாக நடித்துள்ளார்.

மொத்தம் 45 நாட்கள் சென்னையில் பட பிடிப்பு நடந்துள்ளது படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன.இரண்டு பார்டி பாடல்களை நானே எழுதி உள்ளேன் முதன் முறையாக பெண்களை உயர்த்து வகையில் அந்த பார்ட்டி பாடல்கள் எழுதப்பட்டுள்ளது. வரும் 25 தேதி இசை வெளியீடு விழா நடைபெறுகிறது என்கிறார் துரை.

தமிழ்நாட்டு பாரம்பரிய உம்பளாச்சேரி நாட்டு மாடுகள் வளர்ப்பு | Pure Umblachery breed | Naatu Madu

மதுரையில் 10 ரூபாய்க்கு சாப்பாடு! 3 இட்லி 10 ரூபாய், தோசை, பொங்கல் 10 ரூபாய் | Meals Rs.10 Only!!!

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து