பாகிஸ்தானில் 23 கட்சிகளுடன் பர்வேஸ் முஷாரப் மெகா கூட்டணி

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      உலகம்
pervez musharraf 2017 11 12

திருவனந்தபுரம்: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் 23 கட்சிகளுடன் மெகா கூட்டணி அமைத்துள்ளார்.

பாகிஸ்தானில் பல்வேறு வழக்குகளை சந்தித்து வரும் முஷாரப் தற்போது துபாயில் வசித்து வருகிறார். உரிய நேரத்தில் பாகிஸ்தான் திரும்புவேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானில் 23 கட்சிகளுடன் அவர் மெகா கூட்டணி அமைத்துள்ளார். இந்தக் கூட்டணிக்கு பாகிஸ்தான் அவாமி இட்டஹத்  என பெயரிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அவர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூட்டணியின் தலைவராக என்னை தேர்ந்தெடுத்த கட்சிகளுக்கு நன்றி. அனைத்து கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். இக்கூட்டணி ஒரே பெயரில் தேர்தலில் போட்டியிடும். விரைவில் நான் பாகிஸ்தான் திரும்புவேன். பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சித் தலைவர் இம்ரான் கான் எங்களுடன் கைகோக்க வேண்டும்” என்றார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து