முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குல்பூஷன் ஜாதவ் தனது மனைவியை சந்திக்க பாகிஸ்தான் அரசு அனுமதி

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குல்பூஷன் ஜாதவ் தனது மனைவியைச் சந்திக்க அந்நாடு அனுமதி வழங்கியுள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில், மனிதாபிமான அடிப்படையில் குல்பூஷன் ஜாதவ் தனது மனைவிப் பார்ப்பதற்கு பாகிஸ்தான் அனுமதி வழங்குகிறது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்திலுள்ள இந்தியத் தூதரகத்துக்கு கடிதம் அனுப்பட்டுள்ளது” என்று கூறப்பட்ட்டுள்ளது.
இந்திய கடற்படை முன்னாள் அதிகாரியான குல்பூஷன், ஈரானின் சாபஹர் துறைமுகத்தில் வர்த்தகம் செய்து வந்தார். அவரை தலிபான் தீவிரவாதிகள் கடத்தி பாகிஸ்தான் ராணுவத்திடம் ஒப்படைத்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பாகிஸ்தானால் ’இந்தியாவின் ரா உளவு அமைப்பைச் சேர்ந்தவர்’ என்று குற்றம் சாட்டி கடந்த 2016 மார்ச் 3-ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.

எந்தநேரமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்ற நிலையில் நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள ஐ.நா. சபையின் சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாதவின் மரண தண்டனைக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து