வருமானவரி சோதனைகளை அரசியலாக்கக் கூடாது: மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கருத்து

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      தமிழகம்
pon radhakrishnan 2017 1 15

திருச்சி: தமிழகத்தில் நடைபெற்று வரும் வருமானவரித் துறை சோதனைகளை அரசியலாக்க வேண்டாம் என்று பா.ஜ.க, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திருச்சியில் அவர் இது தொடர்பாகக் கூறியபோது, “சுய அதிகாரம் படைத்த வருமான வரித்துறையினரின் சோதனைகளை அரசியலாக்கக் கூடாது. மற்ற மாநிலங்களிலும் வருமான வரிச் சோதனைகள் நடந்திருக்கின்றன” என்றார்.

மேலும், ஜி.எஸ்.டி வரிக்குறைப்பு விளக்கம் அளித்த அவர், உணவு விடுதிகளுக்கான ஜி.எஸ்.டி வரி குறைக்கப்பட்டுள்ளன. இன்னும் சில மாதங்களில் ஜி.எஸ்.டி.யின் தேவையை வணிகர்கள் உணர்ந்து கொள்வார்கள் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து