கோவை ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம் சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரி சோதனை

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      தமிழகம்
kovai arumugasamy

கோவை: கோவையில் தொழிலதிபர் ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகம், சஜ்ஜீவன் வீட்டில் வருமான வரித் துறை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டனர்.

சசிகலா, டிடிவி தினகரன் தொடர்புடையே 187 இடங்களில் கடந்த 9-ம் தேதி முதல் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவர்களது உறவினர்கள், நண்பர்கள், ஆதரவாளர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

கோவையில் கடந்த 9, 10-ம் தேதிகளில் 11 இடங்களில் வருமான வரித் துறையினர் சோதனை மேற்கொண்டனர். மணல் குவாரிகளை ஏலம் எடுத்து நடத்தி வந்த கோவை தொழிலதிபர் ஆறுமுகசாமி, கொடநாடு பங்களாவில் ஃபர்னிச்சர் வேலைகளைச் செய்த சஜ்ஜீவன் ஆகியோரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவர்களது நண்பர்கள் வீடுகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

பெரும்பாலான இடங்களில் சோதனை முடிவடைந்த நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள, ஆறுமுகசாமியின் வர்த்தக வளாகத்தில் சோதனை நடத்தப்பட்டது. இது பிற்பகலில் முடிவடைந்தது.

இதேபோல, போத்தனூரில் உள்ள, மர வியாபாரி சஜ்ஜீவன் வீட்டில்  சோதனை நடத்தப்பட்டது. இங்கு வருமான வரி அதிகாரிகள் உள்ளிட்ட 4 அலுவலர்கள் சோதனை நடத்தினர். 3 நாள் சோதனையில் பல்வேறு முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

சென்னையில் மாற்றுத்திறனாளி சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்த குற்றவாளிகளுக்கு தர்ம-அடி

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து