ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் குஜராத் தேர்தலில் பாஜகவுக்கு எந்தவித பலனும் கிடைக்காது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      புதுச்சேரி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பலன் கிடைக்காது

ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகளுக்கு எதிராக ராகுல் காந்தி உத்தரவின் பேரில் காங்கிரஸ் கட்சி நடத்தி வரும் போராட்டங்களால் இப்போது வரி குறைக்கப்பட்டுள்ளது. 203 பொருட்களுக்கு 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக வரியை குறைத்துள்ளனர். அதேபோல 173 பொருட்களுக்கு 12 சதவீதத்தில்இருந்து 5 சதவீதமாக வரி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. இது காங்கிரசுக்கு கிடைத்த வெற்றியாகும். இந்த வரி குறைப்பால் குஜராத் தேர்தலில்அவர்களுக்கு எந்தவித சாதகமான பலனும் கிடைக்காது. காங்கிரஸ் கட்சியின் முயற்சியால் வரி குறைக்கப்பட்டுள்ளது. புதுவையில் ஏற்கனவே ஏற்பட்ட வறட்சியின் போது மத்திய குழு நேரில்வந்து பார்வையிட்டது. இப்போது இதற்காக 18 கோடி நிவாரணம் வழங்கி உள்ளனர். தற்போது ஏற்பட்டுள்ள மழையால் புதுவைக்கு எந்த பாதிப்பும்இல்லை. அனைத்து பால்வாய்களும் முன் கூட்டியே தூர் வாரி சீர் செய்யப்பட்டிருந்ததால் பாதிப்பு இல்லாமல் தடுக்கப்பட்டுள்ளது. டெங்கு காச்சலால் புதுவையில் பெரிய அளவில் பாதிப்பு ஏதும் இல்லை. 2 பேர் மட்டுமே தனியார் மருத்துவமனையில் உயிர் இழந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார். புதுவை சாலை போக்குவரத்து கழக டிரைவர்கள் எம்எல்ஏக்களுக்கும் மற்ற பணிகளுக்கும் பயன்படுத்துவதால் அதை தடுக்க ஆய்வு செய்யும் படி கவர்னர் உத்தரவிட்டுள்ளார்h. இது குறித்து முதல்வர் நாராயணசாமியிடம் கேட்ட போது,  டெபுடேசன் அடிப்படையில் ஒரு துறையை சேர்ந்தவர்கள் பிற துறையில் பணி புரிவது வழக்கமானது தான். மேலும் கவர்னர் மாளிளையில் கூட டெபுடேசன் அடிப்படையில் வெளிதுறையை சேர்ந்த 64 ஊழியர்கள் பணியாற்றகின்றனர். இப்படி ஒவ்வொரு பிரச்சனையையும் கிளப்பினால் அது பூதகரமாக மாறி விடும் என்றார். பேட்டியின் போது அமைச்சர் ஷாஜகான், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்எல்ஏக்கள் அனந்தராமன், ஜெயமூர்த்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

உடற்பயிற்சியும் ஆரோக்கியமும் | என்றும் 16 | THINABOOMI

இழந்த சொத்து, பதிவி ஆகிவற்றை மீட்டு தரும் ஸ்ரீ ராமநவமி வழிபாடு | PARIGARA STHALANGAL | THINABOOMI

FIR முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வது எப்படி | How to file FIR | Indian Law | Thinaboomi

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து