742 வழக்கறிஞர்கள் இடைநீக்கம் : தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவு

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      தமிழகம்
chennai high court

சென்னை - எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 படிக்காமல் திறந்த வெளி பல்கலைக்கழகம் மூலம் பட்டம் பெற்ற 742 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து தமிழ்நாடு பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் செயலாளர் சி.ராஜகுமார் விடுத்துள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

எஸ்.எஸ்.எல்.சி மற்றும் பிளஸ் 2 படிக்காமல் நேரடியாக திறந்தவெளி பல்கலைக்கழகங்கள் மூலமாக இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்று அதன் மூலமாக வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ளவர்களின் பதிவை ரத்து செய்யக்கோரி சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனடிப்படையில் தமிழ்நாடு பார் கவுன்சிலில் சிறப்புக்குழு கூட்டம் நடத்தப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திறந்தவெளி பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று வழக்கறிஞர்களாக பதிவு செய்துள்ள 742 பேருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் மீதான விசாரணை நிலுவையில் இருக்கும் வரை இவர்கள் யாரும் எந்த நீதிமன்றத்திலும் ஆஜராகி வழக்கறிஞர் தொழில் புரியக்கூடாது என இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அதில் கூறியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து