தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத்திருவிழா தேரோட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      திருநெல்வேலி
therottam

தென்காசி காசிவிசுவநாதர் கோவிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது.

தென்காசி உலகம்மன் உடனுறை காசிவிசுவநாதர் கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா நடைபெறுவது  வழக்கம். இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா கடந்த 2ம்தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை நேரங்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை, பக்தி சொற்பொழிவு, இரவு சுவாமி, அம்பாள் சப்பர பவனி நடைபெற்றது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நாளான நேற்று  தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தினை தென்காசி எம்.எல்.ஏ., செல்வமோகன்தாஸ் பாண்டியன், இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் சங்கர் ஆகியோர்  வடம் பிடித்து துவக்கி வைத்தனர்;. திரளான பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். மேளதாளம் முழங்க, வானவேடிக்கையுடன், சிவனடியார்களின் பஞ்ச வாத்தியங்கள் இசைக்க தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி வந்தது. தேர் நிலை வந்து சேர்ந்ததும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிN~க அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

தேரோட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் கார்த்திக் குமார், சி;ன்னத்துரை பாண்டியன், தொழிலதிபர் ராஜாமணி,  அ.தி.மு.க.மாவட்ட பொருளாளர் இலஞ்சி சண்முகசுந்தரம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வெள்ளகால் ரமேஷ் குறும்பலாப்பேரி அமல்ராஜ், கூட்டுறவு மாரிமுத்து, கௌரி ஜூவல்லர்ஸ் முருகராஜ், முன்னாள் நகராட்சி துணைத் தலைவர் சுடலை, அருணாசலம், முன்னாள் கவுன்சிலர்கள் வெள்ளப்பாண்டி, சந்திரன், கிருஷ்ணமூர்த்தி மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.வரும் 13ம் தேதி காலை அம்பாள் யானைப்பாலம் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருள்கிறார். அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்குதெற்கு மாசிவீதியில் உலகம்மனுக்கு காசிவிசுவநாதர் காட்சி கொடுக்கும் தபசு காட்சி நிகழ்ச்சியும்,  இரவு சுவாமி, அம்பாளுக்கு திருக்கல்யாணமும் நடைபெறுகிறது.தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை  இணை ஆணையர் பரஞ்சோதி, உதவி ஆணையர் சாத்தையா, கோவில் செயல் அலுவலர் சங்கர், கட்டளைதாரர்கள், கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளில் தென்காசி டி.எஸ்.பி.,மணிகண்டன் மேற்பார்வையில் இன்;ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படை வீரர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து