முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தன்வந்திரி பீடத்தில் காலாஷ்டமியை முன்னிட்டு மஹா யாகம்: ஏராளமானோர் தரிசனம்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      வேலூர்
Image Unavailable

 

வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று 11.11.2017 சனிக்கிழமை காலாஷ்டமியை முன்னிட்டு ஸ்வணாகர்ஷண பைரவர், அஷ்ட பைரவர் மற்றும் மஹா பைரவருக்கு விசேஷ பூஜைகளும், மஹா ஹோமமும், மஹா அபிஷேகமும் நடைபெற்றது.

மகா ஹோமம்

ஆலயங்களில் உள்ள பரிவார மூர்த்திகளான ஆஞ்சனேயர், சக்ரத்தாழ்வார், சரபேஸ்வரர், காலபைரவர், தக்ஷிணா மூர்த்தி போன்ற பலவகையான பரிவார மூர்த்திகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நம்தேவைகளுக்காக வழிபட்டு வருகின்றோம். அதில் காக்கும் கடவுளாக உள்ள பைரவர்களுக்கு விசேஷ தினங்களிலும் தேய்பிறை அஷ்டமியிலும், ஜென்மாஷ்டமியிலும், காலாஷ்டமியிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.

பைரவர் காலாஷ்டமியை முன்னிட்டு நேற்றுமுன்தினமும், இன்றும் 11.11.2017 சனிக்கிழமை ஆகிய இரு தினங்கள் கால பைரவர் அருள் கிடைக்கவும் பிதுர் தோஷம், திருமணத்தடை விலகவும், வியாபாரம் செழிக்க, வழக்கில் வெற்றி பெற, குடும்பத்தில் உடன்பிறந்தவர்களிடையே ஒற்றுமை அதிகரிக்க, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்க, தடையின்றி விரும்பிய கல்வியைக் கற்று முதலிடம் பெற, செல்வச் செழிப்பு ஏற்பட, சனி பகவானின் அனைத்து தோஷங்களும் நீங்க,பிரம்மஹத்தி தோஷம் நீங்க, எதிரிகள் தொல்லை நீங்க, பில்லி, சூன்யம், திருஷ்டி அகல, அக்கம் பக்கத்தவர்களின் தொல்லைகள் அகல, யமபயம் நீங்க,வெளி நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு ஏற்படும் தொல்லைகள் நீங்கவும், தச பைரவர்களுக்கு யாகங்கங்களும், அபிஷேகங்களும், அர்ச்சனைகளும் நடைபெற்றது.

இதில் வேலூர் மாவட்ட கலந்து கொண்டு சிறப்பித்தார். மேலும் பல்வேறு தரப்பினர்கள் கலந்துகொண்டு பைரவர்களை தரிசித்தனர்.தேய்பிறை அஷ்டமி யாகம் முடிந்ததும் ஹோமத்தில் பூஜிக்கப்பட்ட ஸ்வர்ண காசு , ஸ்வர்ண யந்திரம், ஸ்வர்ண ரக்ஷை போன்றவை ஸ்வர்ணாகர்ஷண பைரவரின் பிரசாதங்களாக வழங்கப்பட்டது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து