ஓசூரில் பெண்களுக்கான கபாடி போட்டி: 32 மாவட்ட அணிகள் கலந்து கொள்கின்றன

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      கிருஷ்ணகிரி
hsr

 

ஓசூரில் முதல்முறையாக மிக பிரமாண்ட காலரி அமைத்து 32 மாவட்ட அணிகள் பங்கு பெரும் மாநில கபடி சாம்பியன்ஷிப் போட்டி டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளது.

கபடி போட்டி

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நகராட்சி மைதானத்தில் டிசம்பர் 2017- 8, 9, 10. தேதிகளில் மூன்று நாட்கள் சீனியர் பெண்கள் மாநில அளவிலான கபாடி போட்டி நடைபெறுகிறது. இம் மைதானத்தில் பகல், இரவு போட்டிகள் நடைபெற உள்ளதால், இப்போட்டியிக் கான,ஏற்பாடுகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நடைபெறும் போட்டி குறித்து, அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக தலைவர் சோலை ராஜா, பொதுச்செயலாளர் ,சபியுல்லா,தர்மபுரி அமெச்சூர் கபாடி கழக தலைவர் பாஸ்கர்,கிருஷ்ணகிரி மாவட்ட கபாடி கழகம்குமார், செயலாளர் மணி,வேலு£ர் கபாடி கழக செயலாளர் கோபால், சேலம் மாவட்ட கபாடி கழக செயலாளர் சாமியப்பன்,தேர்வுக்குழு சேர்மன் மனோகரன், டெக்னிக்கல் கமிட்டி காசிராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் சிட்டி ஜெகதீசன், ஜெயப்பிரகாஷ், ஹரீஸ் ரெட்டி, வாசுதேவன், செல்வராசு, நாராயண ரெட்டி, அசோகா ரெட்டி, சங்கர் என்கின்ற குபேரன்., கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் பங்குபெற்று வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு முறையே, முதல் பரிசாக ரூ 1 லட்சத்து 50 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ 1 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ 50 ஆயிரம், மற்றும் நான்காம் பரிசாக ரூ 50 ஆயிரம் என நிர்ணயித்து வழங்கவும், போட்டிகளை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து