ஊட்டியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      நீலகிரி
12ooty-1 0

ஊட்டியில் 9_வது ஆப்டிக் கேலரி சுழற்கோப்பைக்கான மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றது.

9-வது ஆண்டு சுழற்கோப்பை

ஊட்டியிலுள்ள ஒய்.எம்.சி.ஏ சங்கம் ஆண்டுதோறும் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகளை நடத்தி வருகிறது. அதன்படி இந்தாண்டு 9_வது ஆப்டிக் கேலரி சுழற்கோப்பைக்கான பொது பிரிவு மற்றும் குழந்தைகளுக்கான மாவட்ட அளவிலான போட்டிகளை கடந்த இரண்டு நாட்களாக நடத்தியது.  ஓய்.எம்.சி.ஏஅரங்கில் 4 பிரிவுகளாக நடத்தப்பட இப்போட்டிகளில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 194 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் பொதுபிரிவில் மைனலை ரவிக்குமார் முதலிடத்தையும், கேத்தி பொறியியல் கல்லூரி மாணவி சஞ்சனா இரண்டாமிடத்தையும் பிடித்தனர். 17 வயதிற்குட்பட்டோருக்கான ஆண்கள் பிரிவில் ரிவர்சைட் பப்ளிக் பள்ளி மாணவன் பூபேஸ் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் நாசரேத் பள்ளி மாணவி திவ்யதர்ஷினி முதலிடத்தையும் பிடித்தனர்.

பரிசுக்கோப்பை, சான்றிதழ்கள்

15 வயதிற்குட்பட்டோர் ஆண்கள் பிரிவில் ஸ்டேன்ஸ் பள்ளி மாணவன் சரண் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி மித்தியா முதலிடத்தையும் பிடித்தனர். 13 வயதிற்குட்டோருக்கான ஆண்கள் பிரிவில் வின்செஸ் அகாடமி நிகில் நிகார் முதலிடத்தையும், பெண்கள் பிரிவில் கேந்திர வித்யாலயா பள்ளி மாணவி விஷ்ணு பிரியா முதலிடத்தையும் பிடித்தனர். 11 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் பஞ்சாயத்து யூனியன் பள்ளி மாணவன் அரவிந்த் முதலிடத்தை பிடித்தார். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுக்கோப்பைகளையும், சான்றிதழ்களையும் வழங்கினார்.
நிகழ்ச்சியில் ஒய்.எம்.சி.ஏதலைவர் தனசிங் இஸ்ரேல், பொது செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ், பர்ன்ஹில் பேலஸ் மேலாளர் கண்ணன், வழக்கறிஞர் ரவிக்குமார், ரகு, நாகராஜ், ராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து