சென்னை - மதுரை ஏசி ரயிலுக்கு வரவேற்பு

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      தமிழகம்
train

சென்னை -  சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே தொடங்கப்பட்டுள்ள புதிய வாராந்திர ஏசி விரைவு ரயிலுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயில்வே வெளியிட்டுள்ள காலஅட்டவணையில் சென்னை சென்ட்ரல் - மதுரை இடையே புதிய வாராந்திர ஏசி விரைவு ரயில் அறிவிக்கப்பட்டது. இந்த ஏசி விரைவு ரயில் (20601) சென்னை சென்ட்ரலில் இருந்து வாரந்தோறும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.20 மணிக்கு மதுரை சென்றடையும். அதேபோல், மதுரையில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10.45 மணிக்கு புறப்படும் இந்த ஏசி ரயில் (20602) மறுநாள் காலை 7.40-க்கு சென்ட்ரல் வந்து சேரும்.

இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘மொத்தம் 8 ஏசி பெட்டிகள் கொண்டு இந்த புதிய வாராந்திர ஏசி விரைவு ரயிலுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது’ ’ என்றனர்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து