முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப்: பங்கஜ் அத்வானி 17-வது முறையாக சாம்பியன்

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

தோஹா: பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி 17-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.

பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் தொடர் தோஹாவில் நடைபெற்று வருகிறது. தொடரின் சாம்பியனுக்கான சுற்றில் இந்திய வீரர் பங்கஜ் அத்வானி இங்கிலாந்து வீரர் மைக் ரசலை எதிர் கொண்டார். இதில் பங்கஜ் அத்வானி 6-2 (0-155, 150-128, 92-151, 151-0, 151-6, 151-0, 150-58, 150-21) என மைக் ரசலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்த சாம்பியன் மூலம் பங்கஜ் அத்வானி 17-வது முறையாக பில்லியர்ட்ஸ் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளார். பங்கஜ் அத்வானி அரையிறுதியில் இந்திய வீரர் ருபெஷ் ஷாவை 5-2 என தோற்கடித்திருந்தார். ரஹல் சிங்கப்பூர் வீரர் பீட்டர் கில்கிறிஸ்டை 5-1 என வீழ்த்தியிருந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து