முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சஞ்சு சாம்சன் சதம்: இலங்கை - இந்திய பிரசிடென்ட் லெவன் பயிற்சி ஆட்டம் 'டிரா'

ஞாயிற்றுக்கிழமை, 12 நவம்பர் 2017      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா: சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் அடிக்க இலங்கை - இந்திய பிரசிடென்ட் லெவன் இடையிலான பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

2 நாள் ஆட்டம்...
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கை அணி இந்தியா வந்துள்ளது. இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் வருகிற 16-ந்தேதி கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதற்கு முன்னோட்டமாக இலங்கை அணி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாட தீர்மானித்தது.

பீல்டிங் தேர்வு
இந்திய பிரசிடென்ட் லெவன் அணிக்கெதிரான இந்த பயிற்சி ஆட்டம் கொல்கத்தாவில் உள்ள ஜாதவ்பூர் யுனிவர்சிட்டி கேம்பஸில் உள்ள மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய பிரசிடென்ட் லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி இலங்கை அணியின் சமரவிக்ரமா, கருணாரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.  சமரவிக்ரமா 77 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். கருணாரத்னே 50 ரன்கள் எடுத்த நிலையில் ரிட்டையர்டு  ஹர்ட் மூலம் வெளியேறினார்.

2-வது நாள் ஆட்டம்
அடுத்து வந்த திரிமன்னே 17 ரன்னில் ஆட்டம் இழந்தாலும், மேத்யூஸ் 54 ரன்னும், டிக்வெல்லா அவுட்டாகாமல் 73 ரன்களும் எடுத்தனர். பெரேரா 44 பந்தில் 48 ரன்களும், சில்வா 36 ரன்களும் சேர்க்க இலங்கை அணி முதல் நாளில் 88 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் குவித்தது, நேற்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல்நாளில் எடுத்த 411 ரன்களோடு இலங்கை அணி முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. அதன்படி இந்திய பிரசிடென்ட் லெவன் அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அகர்வால், ஜிவன்ஜோத் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அகர்வால் 16 ரன்கள் எடுத்த நிலையிலும், ஜிவன்ஜோத் சிங் 35 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பண்டாரி 3 ரன்னில் வெளியேறினார்.

சஞ்சு சாம்சன் சதம்
4-வது வீரராக கேப்டன் சஞ்சு சாம்சன் களம் இறங்கினார். இவர் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். சதம் அடித்த சாம்சன் 128 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பிரேம் 39 ரன்கள் சேர்த்தார். சந்தீப் (39), சக்சேனா (20) தாக்குப்பிடித்து விளையாட இந்திய பிரசிடென்ட் லெவன் அணி 75 ஓவரில் 287 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது. இதனால் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து