முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரான், ஈராக்கில் பயங்கர நிலநடுக்கம்: 330 பேர் பலியான பரிதாபம்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

பாக்தாத், ஈரான், ஈராக் நாடுகளில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை  330 பேர் பலியாகியுள்ளனர். கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருப்பதாலும் மருத்துவமனையில் பலர் பலத்த காயங்களுடன் அனுமதிக்கப்பட்டிருப்பதாலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்புள்ளியானது குர்திஸ்தான் மாகாணத்தின் சுலைமானியா பகுதியில் பெஞ்வின் எனுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம், நிலநடுக்கத்தின் தாக்கம் 7.3 ரிக்டர் எனக் கூறியிருந்தாலும் ஈராக் அரசோ நிலநடுக்கத்தின் தாக்கம் 6.5 ரிக்டர் எனக் கூறுகிறது.

ஈராக் எல்லையை ஒட்டிய கேர்மான்ஷா மாகாணத்தில்தான் மிக மோசமான பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த மாகாணத்தின் துணை ஆளுநர் செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில்,

 "இடிபாடுகளுக்கு இடையே ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். பலி எண்ணிக்கை உயரக்கூடாது எனவே விரும்புகிறோம் ஆனால் நிலைமையைப் பார்த்தால் அது நிஜமாகதுபோல் தெரிகிறது" என்றார்.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஈரான், ஈராக்கில் பல்வேறு இடங்களிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சாலைகள் பல சேதமடைந்துள்ளதால் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

சீரான சாலைகள் இல்லாததால் கிராமப்புறங்களுக்கு செல்ல முடியவில்லை அங்கு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை கணிக்க முடியவில்லை என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்தனர்.

உயிர் பிழைக்க பதறி ஓடிய மக்கள்

  • ஈராக்கில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தங்களை பாதுகாத்துக் கொள்ள மக்கள் ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.
  • ஈரான் மற்றும் ஈராக்கில் நேற்று  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளது.
  • இந்த நிலநடுக்கத்தின் மையம் குர்திஸ்தான் மாகாணத்தின் பெஞ்வின் என்னுமிடத்தில் நிலை கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த பயங்கர நிலநடுக்கத்துக்கு இதுவரை 330 பேர் பலியாகியுள்ளனர். இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கி இருப்பதால் பலி எண்னிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
  • இந்த நிலையில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது பதிவான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
  • ஈராக் தலைநகர் பாக்தாத்திலுள்ள காஃபி ஷாப்பில் நிலநடுக்கத்தை உணர்ந்த மக்கள் தங்கள் உயிரை பாதுகாத்துக் கொள்ள ஓடினார்கள்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து