முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடி கின்னஸ் சாதனை படைக்க இந்திய சிறுமி திட்டம்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

துபாய், துபாயில் வசிக்கும் 12 வயது இந்திய சிறுமி சுசிதா சதிஷ், ஒரே மேடையில் 85 மொழிகளில் பாடத் திட்டமிட்டுள்ளார்.

துபாயில் உள்ள தி இந்தியன் ஹை ஸ்கூலில் 7-ம் வகுப்பு படிக்கிறார் சுசிதா சதிஷ். கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட அவர் வரும் டிசம்பர் 29 அன்று ஒரே மேடையில் 85 மொழிகளில் 85 விதமான பாடல்களைப் பாடத் திட்டமிட்டுள்ளார்.

இதுகுறித்துப் பேசிய சுசிதா, ''ஒரு வருடத்தில் 80 மொழிகளில் பாடல்கள் பாடக் கற்றுக் கொண்டேன். கூடிய விரைவில் புதிதாக 5 மொழிகளைக் கற்று, கின்னஸ் சாதனை நிகழ்த்த உள்ளேன். முதன்முதலில் ஜப்பானிய மொழியில்தான் பாடல் கற்றுக்கொண்டேன். ஒரு வருடத்துக்கு முன்பு என் தந்தையின் ஜப்பானிய தோழி வீட்டுக்கு வந்தார். அவர் ஜப்பானிய மொழியில் பாடல் பாடினார். எனக்கு அப்பாடல் பிடித்துப் போகவே அவரிடமிருந்து அதைக் கற்றுக்கொண்டேன்.

பொதுவாக ஒரு மொழிப் பாடலைக் கற்றுக் கொள்ள எனக்கு 2 மணி நேரம் ஆகும். ஃப்ரெஞ்சு, ஹங்கேரியா மற்றும் ஜெர்மானிய பாடல்கள் எனக்கு மிகவும் கடினமான இருந்தன. ஆனால் முறைப்படி அவற்றைக் கற்ற நான், 85 மொழிப் பாடல்களைப் பாடி விரைவில் கின்னஸ் சாதனையை முறியடிக்க உள்ளேன்'' என்றார்.

முன்னதாக ஆந்திர மாநிலம் காந்தி ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்த கேசிராஜு ஸ்ரீனிவாஸ், 2008-ல் 76 மொழிகளில் பாடல்களைப் பாடி கின்னஸ் சாதனை நிகழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து