முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

என்னை கிழவன் என்று கூறுவதா? வட கொரிய அதிபர் மீது டிரம்ப் பாய்ச்சல்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
Image Unavailable

வாஷிங்டன், நான் கிம்மை குண்டானவர், குள்ளமானவர் என்று அழைக்கவில்லையே.. என்னை எதற்கு கிழவர் என்று கிம் அழைத்தார்?’ என்று அமெரிக்க அதிபர் 'டிரம்ப் கூறியுள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஜப்பான், தென் கொரியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா என ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். டிரம்பின் இந்தப் பயணத்தில், அத்துமீறி ஏவுகணைச் சோதனைகளை நடத்திவரும் வடகொரியாவைப் பற்றியே பெரும்பாலும் முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதிபர் டிரம்பின் இந்தப் பயணம் குறித்து கருத்து கூறிய வடகொரியா, “டிரம்ப் அழிவை ஏற்படுத்துபவர், அணுஆயுத போருக்காக கெஞ்சுபவர். அவர் கிழவர் ஆகிவிட்டதால் அவரது மனம் தளர்ந்துவிட்டது” என்று கூறியிருந்தது.

இதற்கு டிரம்ப் தனது ட்வீட்டில் கிண்டலான தொனியில் பதிலளித்துள்ளார்.

டிரம்ப் தனது ட்விட்டரில், ” நான் கிம்மை குண்டானவர், குள்ளமானவர் என்று அழைக்கவில்லையே.. என்னை எதற்கு கிம் கிழவர் என்று அழைத்தார். நான் கிம்முடன் நண்பர் ஆக முயற்சி செய்து கொண்டிருகிறேன். ஒரு நாள் அது நிச்சயம் நடக்கும் என்று நம்புகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். ஐ.நா. சபையின் எச்சரிக்கையை மீறி வட கொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இதன்காரணமாக, அந்த நாட்டின் மீது ஏற்கெனவே பல்வேறு பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி, 6-வது முறையாக அணு குண்டைவிட அதிக சக்திவாய்ந்த ஒரு ஹைட்ரஜன் குண்டை வடகொரியா வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து, கடந்த 11-ம் தேதி அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று, வட கொரியா மீது 8-வது முறையாக பொருளாதாரத் தடை விதித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 ஐ.நா. வின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து