முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வைஷ்ணவி தேவி கோயிலுக்கு ஒருநாளுக்கு 50 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி: தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

காஷ்மீர், காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலுக்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும் என தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் காத்ரா பகுதியில் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி கோயில் அமைந்துள்ளது. இங்கு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் நாள்தோறும் வழிபாடு நடத்த வருகின்றனர். மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த கோயிலில் அதிக அளவு பக்தர்கள் வருகையால் மாசு ஏற்படுவதாக கூறி தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கெளரி என்பவர் பொதுநல மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாய நீதிபதி சுவதந்தர் குமார் தனது உத்தரவில் கூறியுள்ளதாவது:

''வைஷ்ணவி தேவி கோயிலுக்கு வரும் பக்தர்கள் ஏராளமானோர் குதிரைகளில் வருகின்றனர். இதனால் அந்த இடம் கடுமையான மாசு அடைந்து வருகிறது. அங்குள்ள ஆறும் மிக மோசமான பாதிப்படைந்துள்ளது. இதனால் பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. இனிமேல் அங்கு நாளொன்றுக்கு 50 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு மேல் வருபவர்கள் அர்த்குவாரி அல்லது காத்ரா நகரில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்.

ஆற்றில் கழிவு சேருவதை தடுக்க நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். நடந்து செல்லும் பக்தர்களுக்கும், பேட்ரி காரில் செல்பவர்களுக்கும் நவம்பர் 24-ல் தனிப்பாதையை திறக்க வேண்டும். அங்கு கழிவுப்பொருட்களை வீசி ஏறிபவர்களுக்கு 2,000 ரூபாய் அபராதம் விதிக்க வேண்டும்'' என நீதிபதி சுவதந்தர் குமார்  உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து