சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      இந்தியா
Chhattisgarh 2017 8 21

டேராடூன், சத்தீஸ்கர்  மாநிலத்தில் சில இடங்களில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொல்ல்ப்பட்டனர்.

சத்தீஸ்கர் மாநிலத்தின் சில மாவட்டங்களில் நக்ஸல் தீவிரவாதிகளின் ஆதிக்கம் உள்ளது. அவர்களை ஒழிக்க சத்தீஸ்கர் அரசு சிறப்பு அதிரடிப் படையை அமைத்துள்ளது. அந்த படை வீரர்களும் மாவட்ட ரிசர்வ் கார்டு வீரர்களும் இணைந்து நேற்று பிஜாப்பூர் வனப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு பதுங்கியிருந்த நக்ஸல் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படை வீரர்களுக்கும் இடையே கடும் சண்டை நடைபெற்றது. இதில் 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அங்கிருந்த ஏராளமான ஆயுதங்கள், வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து