கோஸ்டாரிக்காவையும் குலைநடுங்க வைத்தது நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      உலகம்
costa rica earthquake 2017 11 13

சான் ஜோஸ்,  பசிபிக் கடற்கரை நாடான கோஸ்டா ரிக்காவிலும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. அதன் தலைநகரான சான் ஜோஸில் அதிகபட்சமாக 6.5 என்கிற அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

 ஆனால், அதில் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள், இடிபாடுகள் குறித்து தற்போது வரை எந்தத் தகவலும் இல்லை. இந்த நிலநடுக்கத்தால் பசிபிக் பகுதியில் சுனாமி வர வாய்ப்புகள் இல்லை என்று அமெரிக்க பருவநிலை மையம் தெரிவித்து உள்ளது. அதே சமயம் சுற்றுலா நகரமான ஜாகோவில் உணரப்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன என்று தகவல் வெளியாகி உள்ளது.
கோஸ்டா ரிக்காவின் பேரிடர் முன்னெச்சரிக்கைக் குழு நிலைமையை சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து