சென்னையில் விட்டுவிட்டு மழை - கடும் குளிர்:

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      தமிழகம்
rain chennai 2017 11 01

சென்னை,  சென்னையில் நேற்று காலை முதல் விட்டு விட்டு மழை பெய்தது. அத்துடன் கடும் குளிரும் நிலவி வருகிவதால் சென்னை நகர் ஊட்டி போல உள்ளது .

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை சூடுபிடித்துள்ளது. நேற்று  முன்தினம் முதல் சென்னையில் விடிய விடிய இடி மின்னலுடன் மழை கொட்டியது. இதனால் தாழ்வானப் பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில் நேற்று காலை முதல் விட்டு மழை பெய்து வருகிறது. பலத்த காற்று பிற்பகலுக்குப் பிறகு பரவலாக தூறிக் கொண்டே இருக்கிறது. திடீர் திடீரென நல்ல மழையும் பெய்து வருகிறது. அவ்வப்போது பலத்த காற்றும் வீசி வருகிறது.

இதனால் நகர் முழுக்க கடுமையான குளிர் நிலவி வருகிறது. தொடர் மழை மற்றும் குளிரால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். மழை மற்றும் குளிரால் இருச்சக்கர ஊர்தி ஓட்டிகள் பெரும் அவதியடைந்துள்ளனர். தொடர் மழையால் சாலைகளில் தண்ணீர் தண்ணீர் தேங்கியுள்ளதால் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கிறது. குளிர் மற்றும் சாரல் மழையால் சென்னை ந கர்  முழுவதும் ஊட்டி போல் உள்ளது. அடையாறு, கிண்டி, வளசரவாக்கம், வடபழனி தி நகர், அண்ணா நகர், அம்பத்தூர் என அனைத்து பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் மழை நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்திருப்பதால் அலுவலகம் சென்றிருப்பவர்கள் முன்கூட்டியே வீடு திரும்பி வருகின்றனர். இதனால் சென்னை அண்ணசாலை, வடபழனி, அண்ணாநகர் உட்பட பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஆரம்பித்துவிட்டது.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து