அமராவதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறப்பு: முதல்வர் எடப்பாடி உத்தரவு

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      தமிழகம்
CM Edapadi 2017 9 3

சென்னை, அமராவதி அணையிலிருந்து நாளை முதல் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள அமராவதி அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு  வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றம் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி அணையின் பழைய மற்றும் புதிய பாசனப் பகுதிகளுக்கு பாசனத்திற்காக நாளை முதல்  தண்ணீர் திறந்துவிட  ஆணையிட்டுள்ளேன்.


இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 47,117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து