நெல்லை மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் 156 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.28 லட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகள் அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி வழங்கினார்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      திருநெல்வேலி
minister rajalakshmi

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில்  மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் விழா  நடைபெற்றது. இவ்விழாவில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் வி.எம்.ராஜலெட்சுமி  கலந்து கொண்டு 156 மாணவ, மாணவிகளுக்கு ரூ.20.28 இலட்சம் மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார். இவ்விழாவில், கலெக்டர் சந்தீப் நந்தூரி  கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இவ்விழாவில்  ஆதிதிராவிடர்  மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்  பேசியதாவது-

விலையில்லா மடிக்கணினி

புரட்சித்தலைவி அம்மா  தமிழக மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில வேண்டும்.  அறிவாற்றல் மிக்கவர்களாக திகழ வேண்டும் என்பதற்காக  பல்வேறு திட்டங்களை தீட்டி, செயல்படுத்தினார்கள்.  புரட்சித்தலைவி அம்மா  தமிழக மாணவ, மாணவிகள் கணினி அறிவுத்திறனை வளர்த்து, உலக அளவில் சிறந்து விளங்க வேண்டுமென்பதற்காக விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தினை கொண்டு வந்தார்கள். மேலும், சிறுபான்மையினர் நலனிற்காக பல திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக, ரம்ஜான் நாளில் நோன்பு கஞ்சி வழங்குவதற்காக மானிய விலையில் அரிசி வழங்கும் திட்டம், உலாமக்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தி உள்ளார்கள். மாணவ, மாணவிகள் சிறப்பாக கல்வி பயில வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம்  மாணவ, மாணவிகள் சிறந்த குறிக்கோள்களை ஏற்படுத்திக் கொண்டு, கனவு காணுங்கள். சிறந்த இலக்கினை அடைய வேண்டுமென தெரிவித்துள்ளார். எனவே, நீங்கள் சிறந்த குறிக்கோள்களை ஏற்படுத்தி கனவு பயணத்தினை தொடர்ந்து வெற்றியாளராக வேண்டும். பரம்பரியமிக்க பழமையான இப்பள்ளி பல இலட்சம் மாணவ, மாணவிகளை உருவாக்கியுள்ளது. இன்னும் பல இலட்சம் மாணவ, மாணவிகளை வெற்றியாளர்களாக உருவாக்க வேண்டும். இப்பள்ளி 99 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்கள். வரும் காலங்களில் 100 சதவிதம் தேர்ச்சி பெற வேண்டும். பள்ளி மென்மேலும் வளர்ச்சியடைய வேண்டுமென பேசினார்.

இவ்விழாவில், முஸ்லிம் மேல்நிலைப்பள்ளி தாளாளர் முகம்மது அபுபக்கர் சாகீப், முஸ்லிம் கல்விக் கமிட்டி தலைவர் எல்.கே.எஸ்.முகம்மது மீரான் முகைதீன், துணைத் தலைவர் கே.ஏ.எம். முகம்மது அலி அக்பர், முக்கிய பிரமுகர்கள் சுகா பரமசிவம், ஜெரால்டு, பரணி சங்கரலிங்கம், தச்சை கணேச ராஜா, ஆறுமுகம், கண்ணன் (எ) ராஜூ, மகபூப் ஜான், ராமசுப்பிரமணியன், கே.எம்.சின்னதுரை, கபேரியல் ராஜன், செந்தில் ஆறுமுகம், எஸ்.எஸ்.ஹயாத், பள்ளி தலைமை ஆசிரியர் ஷேக் முகம்மது மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து