செங்கோட்டையில் தமிழக பள்ளி கலைத் திருவிழா நீதிபதி பிடி.சதீஷ்குமார் துவக்கி வைத்தார்

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      திருநெல்வேலி
sengottai cultural

செங்கோட்டை கச்சேரி காம்பவுண்ட் நடுநிலைப்பள்ளியில் வைத்து செங்கோட்டை ஒன்றிய அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான 2017—2018ஆம் ஆண்டுகளுக்கான பள்ளிக் கலைத் திருவிழா மற்றும் போட்டிகள் நடந்தது. நிகழ்ச்சிக்கு உதவி தொடக்க கல்வி அலுவலர் மேரிகிரேஸ்ஜெயராணி தலைமைதாங்கினார். பள்ளி தலைமைஆசிரியர் பீட்டர்ஜீடுதத்தோஸ் அனைவரையும் வரவேற்று பேசினார். செங்கோட்டை வட்ட சட்டப்பணிகள் குழு தலைவரும் மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதித்துறை நடுவரும் நீதிமன்ற நீதிபதி பிடி.சதீஷ்குமார் குத்துவிளக்கு ஏற்றி வைத்து நிகழ்ச்சியினை துவக்கி வைத்து பேசினார். பின்னர் குழந்தை மற்றும் வளரிளம் பருவத்தினர் தொழிலாளர் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கி துண்டு பிரசுரங்களை ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்களிடம் வழங்கினார்.

பல்வேறு போட்டிகள்

அதனைதொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கான போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 1முதல் 3ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ஒப்புவித்தல் போட்டி, மழலையர் பாடம், கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல் மற்றும் தனித்திறன், 3ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு நாட்டுப்புற நடனம்(குழு), ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டுதல், களிமண் பொம்மைகள், அழகு கையெழுத்து, தேசபக்தி பாடல்கள் (குழு), 6ஆம் வகுப்பு முதல் ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தனிநடனம், பேச்சுப்போட்டி, மனதில் பதிந்த இயற்கை காட்சிகளை வரைதல், கற்பனைக்கேற்றவாறு சிற்பம் செதுக்குதல் நாட்டுப்புற கலைகள் வளர்ச்சி விழிப்புணர்வு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் செங்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட 42 தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த சுமார் 500க்கும் மேற்ப்பட்ட மாணவ, மாணவியர்கள் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் நீதிமன்ற உவியாளர் செண்பக்குமார், வட்டசட்டப்பணிகள் குழு தன்னார்வ பணியாளர் ஜெயராமசுப்பிரமணியன் உள்பட கலந்து கொண்டனர். முடிவில் சுதந்திர போராட்ட வீரர்வாஞ்சிநாதன் அரசு நடுநிலைப்பள்ளி ஆசிரியர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து