தூத்துக்குடி மாவட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி கலெக்டர் என்.வெங்கடேஷ் தலைமையில் நடந்தது

திங்கட்கிழமை, 13 நவம்பர் 2017      தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் சைல்டு லைன் 1098 இந்;தியா பவுண்டேஷன் மூலம், குழந்தைகள் தினவிழாவினை ஒருவாரமாக கொண்டாடப்பட உள்ளது. இதன் தொடர்ச்சியாக, குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து, அனைத்து அரசு அலுவலர்கள், பொதுமக்கள், குழந்தைகளிடையே ஏற்படத்தப்படவுள்ளது. அதற்கான விழிப்புணர்வு துவக்க நிகழ்ச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலெக்டர் என்.வெங்கடேஷ் , தூத்துக்குடி உண்டு உறைவிட பள்ளி மாணவ, மாணவிகள், சைல்டு லைன் நண்பாராகுங்கள் (Child Line dosti)  என்ற ராக்கி கயிறினை கட்டினார்கள். கலெக்டர் அவர்கள், 5 மாணவ, மாணவியர்களுக்கு ஆங்கிலம், தமிழ் அகராதியினை வழங்கினார்கள்.

பல்வேறு நிகழ்ச்சிகள்

அதனை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் 14.11.2017 அன்று நடைபெறவுள்ள குழந்தைகள் தின விழாவை சிறப்பிக்கும் பொருட்டு, நவம்பர் 13 முதல் 19 வரை பின்கண்ட முறையில், விழிப்புணர்வு நிகழ்ச்சியாகவும், சைக்கிள் பேரணியாகவும், பள்ளிகளில் விழிப்புணர்வு பட்டிமன்றங்களாகவும், மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும், நவம்பர் 14 குழந்தைகள் தினம் அன்று, குழந்தைகள் பாதுகாப்பு குறித்து உறுதிமொழி எடுக்கவும், 14.11.17, தூத்துக்குடி பள்ளி மாணவிகளின், சைக்கிள் விழிப்புணர்வு பேரணி, 15.11.17 அன்று மாவட்ட சமூகநல விரிவாக்க அலுவலர், கிராம ஊர்நல அலுவலர், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட அலுவலர்களுக்கு குழந்தை திருமணம் தடுப்புச்சட்டம் குறித்த திறன்வளர்ப்பு பயிற்சி நடத்தப்படவுள்ளது. 15.11.17 மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி பழைய பேரூந்து நிலையத்தில், பேரூந்துகளில் சைல்டு லைன் 1098 விழிப்புணர்வு ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன, 16.11.17 காலை 11.00 மணியளவில், சைல்டு லைன் 1098 அலுவலகத்தில், பள்ளி மாணவ, மாணவிகளுடன், குழந்தை நேயத்துடன், உரையாடுதல், 17.11.17 அன்று தூத்துக்குடி மாவட்ட 6 வட்டாரங்களில் உள்ள பள்ளிகளில், பள்ளி மாணவ, மாணவிகளை வைத்து, இணையதளம் இளையோர்க்கு இன்பமா? துன்பமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட உள்ளது.  18.11.17 அன்று காலை 10.30 மணியளவில், தூத்துக்குடியில் அமைந்துள்ள லூசியா மாற்றுத்திறனாளிகள் இல்லத்தில் சிறப்பு குழந்தைகளுடன் விழிப்புணர்வு விளையாட்டுடன் நடத்தப்படவுள்ளது.  19.11.17 அன்று மாலை 4.30 மணியளவில் தூத்துக்குடி முத்துநகர் கடற்கரையில் வைத்து, மணல் ஓவியம் மூலம் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படவுள்ளது.  மேலும், ஜனவரி 2017 முதல் அக்டோபர் 2017 வரை குழந்தைகள் சம்பந்தமாக 427 அழைப்புகள் வந்துள்ளன.  427 அழைப்புகளையம் சைல்டு லைன் 1098 பணியாளர்கள், விசாரித்து, குழந்தைகளின், மறுவாழ்வை உறுதி செய்துள்ளனர். – என கலெக்டர் என்.வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்கள்.  

இந்நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சரவணன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பா.ஜோதிக்குமார், சைல்டு லைன் 1098 இயக்குநர் மன்னார்மன்னன், ஒருங்கிணைப்பாளர் வு.காசிராஜன், சைல்டு லைன் 1098 பணியாளர்கள் மற்றும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து