பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் அதிபர் இந்தியா வருகிறார்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      உலகம்
modi 2017 11 14

மணிலா: பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் இந்தியாவிற்கு வருகை தர உள்ளார்.

ஆசியான் அமைப்பின் 31-வது உச்சி மாநாடு பிலிப்பைன்ஸ் தலைநகர்  மணிலாவில் நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அங்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியுடெர்ட் ஆகியோரை மோடி, சந்திந்துப் பேசினார்.

இந்த நிலையில் பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று பிலிப்பைன்ஸ் அதிபர் டியுடெர்ட் இந்தியா வர சம்மதம் தெரிவித்துள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.


இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (கிழக்கு) செயலாளர் ப்ரித்தி சரண் கூறியபோது, "இந்தியா- பிலிப்பைன்ஸ் இரு நாட்டுத் தலைவர்களும், இரு நாட்டு உறவு குறித்து ஆலோசனை நடத்தினர். இதில் பயங்கரவாதத்துக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்படுவது உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இந்தச் சந்திப்பின்போது, இந்தியாவுக்கு வர பிரதமர் மோடி விடுத்த அழைப்பை பிலிப்பைன்ஸ் அதிபர் ஏற்றுக் கொண்டுள்ளார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து