ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவராக 10-வது முறையாக லல்லு பிரசாத் தேர்வு

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      இந்தியா
lalu 2017 5 17

பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தேசிய தலைவராக 10-வது முறையாக லல்லு பிரசாத்  யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டார்.
ஆர்ஜேடி கட்சித் தலைவர் தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்கு நேற்று முன்தினம் கடைசி நாள். இதில் லல்லு பிரசாத்தை தவிர வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இதைத் தொடர்ந்து அவர் கட்சியின் தேசிய தலைவராக 10-வது முறையாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

வரும் 20-ம் தேதி கட்சியின் புதிய தேசிய செயற்குழு கூடுகிறது. இதில் லல்லு பிரசாத் கட்சியின் தலைவராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படுவார்.
ஜனதா தளத்தில் இருந்து பிரிந்த லல்லு பிரசாத் கடந்த 1997-ம் ஆண்டு ஆர்ஜேடி கட்சியை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை கட்சியின் தலைவராக லல்லு பிரசாத் தொடர்கிறார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து