முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர காவல் படையால் மீனவர்கள் சுடப்பட்ட விவகாரம்: மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்கப்படும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை: ராமேஸ்வரம் மீனவர் பிச்சை இந்திய கடலோர காவல் படையினராலேயே சுடப்பட்ட விவகாரம் குறித்து மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு ஏற்கப்படும் என தலைமை நீதிபதி அமர்வு தெரிவித்துள்ளது.

ஐந்து நாள் வேலை நிறுத்தத்துக்கு பிறகு நேற்று மீன் பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை இந்திய கடலோர காவல் படையினர் தாக்கியுள்ளதாக தகவல் வெளியானது. இதில் துப்பாக்கியால் சுட்டதில், தங்கச்சிமடத்தை சேர்ந்த பிச்சை என்ற மீனவர் காயமடைந்து, தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், தமிழக மீனவர்கள்மீது கடலோர காவல் படையினரே தாக்குதல் நடத்தியது குறித்து தானாக முன் வந்து விசாரணைக்கு ஏற்க வேண்டுமென மீனவர் நல சங்கத்தின் எல்.டி.ஏ.பீட்டர் ராயன் சார்பில் வழக்கறிஞர் மவுரியா தலைமை நீதிபதி அமர்வு முன்பு ஆஜராகி முறையிட்டார்.

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது நமது இந்திய கடலோர காவற்படையே துப்பாக்கிச் சூடு நடத்தியது ஏற்கதக்கதல்ல. எனவே இந்த சம்பவம் குறித்து நீதிமன்றம் தானாக முன் வந்து வழக்கை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

இதை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மனுவாக தாக்கல் செய்தால் நவம்பர் 17-ம் தேதி விசாரித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து