நியமன எம்எல்ஏக்களை அங்கீகரிக்க புதுவை சபாநாயகர் வைத்திலிங்கம் மறுப்பு 23-ந் தேதி சட்டசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      புதுச்சேரி

புதுவை சட்டசபையில் 30 எம்எல்ஏக்கள் உள்ளனர். இவர்களை தவிர நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை மாநில அரசின் பரிந்துரையின் பேரில் நியமிக்க முடியும். புதுவை மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மாநில அரசின் பரிந்துரை இல்லாமல் கடந்த ஜூலை 4-ந் தேதி மத்திய உள்துறை நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை நியமித்தது. புதுவை மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், மற்றும் செல்வகணபதி ஆகியோர் நியமன எம்எல்ஏக்களாக நியமிக்கப் பட்டனர். இவர்கள் தங்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் படி சபாநாயகர் வைத்திலிங்கத்திடம்கடிதம் கொடுத்தனர். இந்த கடிதத்தை ஆய்வு செய்து அழைப்பதாக சபாநாயகர் கூறி இருந்தார். இந்த நிலையில் அன்றைய தினம் இரவோடு இரவாக கவர்னர் கிரன்பேடி 3 நியமன எம்எல்ஏக்களுக்கும் கவர்னர் மாளிகையில் பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து நியமன எம்எல்ஏக்கள் சட்டசபையில்தங்களுக்கு இருக்கை, அலுவலகம் உள்ளிட்ட சலுகைகளை ஒதுக்கித்தரும்படி சட்டமன்ற செயலாளர் வின்செனட் ராயரிடம் கடிதம் அளித்தனர்.இந்த கடிதத்தை ஆய்வு செய்து உரிய பதில்அளிப்பதாக சட்டமன்ற செயலாளர் கூறி இருந்தார். இதையடுத்து அதிகாரம் படைத்த நபரிடம்இருநது உரிய உத்தரவு வராததால் எம்எல்ஏக்கள் நியமனத்தை ஏற்க முடியாது என்று சட்டமன்ற செயலகம் 3 பேருக்கும்கடிதம்அனுப்பியது. இந்த நியமன எம்எல்ஏக்களை மத்திய உள்துறை நியமித்தது செல்லாது என்று அறிவிக்க கோரி முதல்வரின் பாராளுமன்ற செயலாளர் லட்சுமிநாராயணன் சென்னை ஜகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மேலும் காங்கிரஸ் எம்எல்ஏ விஜயவேணி சபாநாயகரிடம் நியமன எம்எல்ஏக்கள் நியமனத்தில் உரிய விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படவில்லை தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படவில்லை எனவே இந்த நியமனத்தை ஏற்க கூடாது என்று கடிதம் அளித்தார். இதன் பின்னர் சபாநாயகர் வைத்திலிங்கம் தன் சொந்த விஷயமாக அமெரிக்கா சென்று விட்டார். அவர் கடந்த 30-ந் தேதி புதுவை திரும்பினார். இதற்கிடையே பாரதிய ஜனதா கட்சியினர் நியமன எம்எல்ஏ தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து புகார் அளித்தனர். மத்திய உள்துறை நியமன எம்எல்ஏக்கள் தொடர்பாக புதுவை அரசுக்கு நேரடியாக கடிதம் அனுப்பியது. அதில் 3 நியமன எம்எல்ஏக்களையும் அங்கீகரிக்க வேண்டும் என்று கூறி இருந்தது.இதனால் சபாநாயகர் எம்எல்ஏக்களின் நியமனத்தை ஏற்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்தது. கடிதங்களை ஆய்வு செய்து ஓரிரு நாளில்முடிவெடுப்பேன் என்று சபாநயாகர் வைத்திலிங்கதமம் கூறி இருந்தார். இந்த சூழ்நிலையில் புதுவை சட்டசபை செயலகம் 3 எம்எல்ஏக்களின் நிமனத்தை திட்டவட்டமாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சட்டமன்ற செயலாளர் வின்சென்ட்ராயா, நியமன எம்எல்ஏக்கள் சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வகணபதி ஆகியோருகு ஒரு கடிதம்அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-இந்திய அரசியலமைப்பு சட்டம், புதுவை யூனியன் பிரதேச சட்டம் 1963 ஆகியவற்றிக்கு மாறாக 3 நிமன உறுப்பினர்கள் உரிய அதிகாரம் படைத்த நபரால் நியமிக்கப்படவில்லை. நியமனமே செல்லாது என்ற சூழலில், கவர்னர் பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பதற்காக உங்களை எம்எல்ஏக்களாக அங்கீகரிக்க முடியாது. எனவே எம்எல்ஏக்களின் சலுகைகள் கோரிய உங்கள் கோரிக்கைகளை நிராகரிக்கிறேன். இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார். சபாநாயகர் வைத்திலிங்கத்தின் உத்தரவின் படி இந்த கடிதத்தை சட்டசபை செயலாளர் 3 பேருக்கும் அனுப்பி உள்ளார். மேலும் இந்த கடிதத்தின் நகல் அரசின் அனைத்து துறைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் நிராகரித்து இருப்பதால் 3 நியமன எம்எல்ஏக்களும் 23-ந் தேதி தொடங்கும் சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

How to Make Coconut Oil at Home? | வீட்டிலியே சுலபமாக தேங்காய் எண்ணெய் தயாரிப்பது எப்படி?

குறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi

Rajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

Kili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2

Chippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2

Chippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து