முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமூகவலைதளங்களில் ஆபாச வீடியோ வெளியீடு - ஹர்திக் பட்டேல் கண்டனம்

செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2017      இந்தியா
Image Unavailable

காந்திநகர்,  சமூக வலைதளங்களில் தம்மை பற்றிய வீடியோ வெளியானதற்கு பட்டேல் சமூகத் தலைவர் ஹர்திக் பட்டேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குஜராத்தில் பட்டேல் இன மக்களுக்கு இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய அளவில் போராட்டத்தை நடத்தி குஜராத் அரசையே நிலைகுலையச் செய்த இளைஞர் ஹர்திக் பட்டேல். 24 வயதான இந்த இளைஞர் தற்போது பட்டேல் சமூகத்தில் மிகுந்த செல்வாக்கு உடைய நபராகப் பார்க்கப்படுகிறார்.

டிசம்பரில் நடக்க இருக்கும் குஜராத் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ்- பா.ஜ.க இரண்டு கட்சிகளும் தீவிரமாக முயற்சிக்கின்றன. பா.ஜ.க மீது வெறுப்பில் இருக்கும் ஹர்திக் பட்டேல் காங்கிரஸிற்கு ஆதரவு அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுபோலவே ஹர்திக் பட்டேலும் பேசி வருகிறார். அதனால், எப்படியாவது ஹர்திக் பட்டேலை தங்கள் பக்கம் இழுக்க வேண்டும் என்றும் பா.ஜ.க முயற்சி செய்துவருகிறது. இதற்கு பிடி கொடுக்காமல் இருந்த ஹர்திக் பட்டேல் மீது போலீஸ் மூலமாக வழக்குப்பதியப்பட்டது. அதிலும் ஹர்திக் பட்டேலை கட்டுப்படுத்தமுடியவில்லை.

சில நாட்களுக்கு முன் குஜராத் தொலைக்காட்சி ஒன்றில் பட்டேல் இனத்தலைவர் ஹர்திக் பட்டேலும், வேறு ஒரு பெண்ணும் இருக்கும் வீடியோ காட்சி வெளியானது. இதனால் குஜராத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து பத்திரிகையாளர்களைச் சந்தித்த ஹர்திக் பட்டேல், பா.ஜ.க என்னைப் பல வழிகளில் வழிக்கு கொண்டு வரப்பார்த்தனர். ஆனால் ,நான் அதற்கு சம்மதிக்கவில்லை. அதனால் தற்போது இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளனர். என்னைப் பழி வாங்குவதாக நினைத்துக்கொண்டு குஜராத் பெண்களை இழிவாக சித்தரிக்கிறது பா.ஜ.க. வேறு எந்த வழியிலும் அவர்களால் அரசியல் செய்ய முடியாததால் இப்படி கீழ்த்தரமான அரசியலில் இறங்கி விட்டனர். இது எதுவும் என்னைப் பாதிக்காது. நான் பா.ஜ.கவிற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன். காங்கிரஸ் உடனான பேச்சுவார்த்தை நல்லபடியாக நடந்துகொண்டிருக்கிறது. விரைவில் முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து